2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் |
ஹீரோயினாக வலம் வரவேண்டும் என்ற ஆசையில் பெண்கள் சிலர் திரைத்துறைக்கு செல்ல முயற்சி செய்கின்றனர். சிலர் வெற்றிக்கோட்டில் கால்பதிக்கின்றனர். இவர்களில் சிலர் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தங்கள் திறமையால் முன்னேறுபவர்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் தீபா. தஞ்சாவூர் தமிழச்சி. புதுமுகமாக சில படங்களில் நடித்து விட்டார். ஒரு படத்தில் ஹீரோயினாகவும் நடிக்கிறார்.
இவர் தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக மனம் திறந்தது...
உங்கள் குடும்பம் ...
நான் மிடில் கிளாஸ் பேமிலி. தஞ்சாவூர் மாவட்டம் பள்ளத்துப்பட்டி என் கிராமம். அம்மா, அண்ணன் மட்டும் தான். 2017ல் பள்ளிப்படிப்பை முடித்து சீனாவில் டாக்டர் படிப்பிற்கு சேர்ந்தேன். கொரோனா காலக்கட்டத்தினால் ஊருக்கு வந்தேன். அதன்பின் ஆன்லைனில் படித்து கொண்டிருக்கிறேன்
சினிமாவில் நுழைந்தது...
2020ல் யுடியூப்பிற்காக முதன் முதலாக என்னை ஷாட் பிலிமில் நடிக்க அழைத்தனர். அப்போது என் அம்மாவிடம் கேட்டேன். அனுமதி கொடுத்தார். நடிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்திலே வரவேற்பு கிடைத்தது. அடுத்த கட்டமாக வெப் சீரிசில் வாய்ப்பு வந்தது. அதிலும் நடிக்க தொடங்கினேன்.
எப்போது வைரல் ஆனீர்கள்...
ஷாட் பிலிம் ஒன்றில் ஹீரோவுடன் டீக்கடையில் பேசிக்கொண்டிருக்கும் போது ஹீரோ,'தேன் மிட்டாய் வாங்க வேண்டும்; பணம் கொடு' என்று கேட்பார். நான் கோபத்தில் பணம் கொடுப்பது போன்ற சீன். நினைத்து கூட பார்க்காத அளவிற்கு வைரலானது. எனக்கும் அங்கீகாரம் கிடைத்தது.
ஹீரோயினாக நடிக்கிறீர்கள் போல...
ஆமா...கொலைச்சேவல் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன். விக்ரம் பிரபு நடிக்கும் படத்தில் 2வது கதாநாயகி, காவல்துறை உங்கள் நண்பன் உள்ளிட்ட 5 படங்களில் நடித்து வருகிறேன். 3 படங்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்.
சீரியலில் நடிக்க விருப்பமா
நீண்ட காலங்கள் ஒரே குழுவில் நடிக்க வேண்டும் என்பதால் எனக்கு ஆசையில்லை. சினிமாக்கள் குறுகிய காலம் தான். பணி முடிந்ததும் வேறு படத்திற்கு நடிக்க செல்லலாம்.
உங்களுக்கு பிடித்தது ...
எனக்கு அதிகமாக மேக்கப் செய்ய பிடிக்காது. இயற்கையாக இருப்பது தான் எனக்கு பிடிக்கும். கிளாசிக்கல் நடனம் ஆடுவது பிடிக்கும்.
ரசிகர்கள் மத்தியில் உங்களுக்கான வரவேற்பு
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பேன். ரசிகர்கள் என்னை உற்சாகப்படுத்தும் வகையில் என் புகைப்படங்களுக்கு கமெண்ட்ஸ் செய்கின்றனர். நான் இந்த அளவிற்கு பேமஸ் ஆவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.
உங்களை எப்போதும் ஊக்குவிப்பவர் யார்
என் அம்மாவை தான் நான் எப்போதும் 'மோட்டிவேஷனாக' நினைப்பேன். இந்த உலகில் என்னை அறிமுகப்படுத்தியவர். எனக்கு பக்கபலமாக இருக்கிறார். நான் நடிக்க செல்லலாமா என்று கேட்டதற்கு, நம்மை தேடி வந்த வாய்ப்புகளை விடக்கூடாது எனக்கூறி என்னை அனுப்பி வைத்தார்.
யாரோடு நடிக்க ஆசை...
நல்ல கதாபாத்திரமாக இருந்தால் எந்த நடிகர்களோடும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன்.
நடிக்க விரும்புகிறவர்களுக்கு நீங்கள் சொல்வது...
சினிமாத்துறையில் நுழைவது எளிதல்ல. முயற்சியை கைவிடக்கூடாது. கிடைத்த வாய்ப்புகளை தவற விடக்கூடாது.