ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடித்தால் ஹீரோயினாகத் தான் நடிப்பேன் என,அடம் பிடிக்கும் நடிகைகளுக்கு மத்தியில், லட்சுமி ராய், சற்று வித்தியாசமானவராக உள்ளார். சமீபத்தில், அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "ஹீரோயின் ரோல் தான் வேண்டும் என, அதற்காக, காத்திருந்து காலத்தை கழிப்பதில், எனக்கு இஷ்டம் இல்லை. எந்தவிதமான ரோலிலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.ஒரு நடிகை, எந்த வேடத்திலும் நடிக்க தயாராக இருக்க வேண்டும். படம், வெற்றி பெறுகிறதா; இல்லையா என்பது முக்கியமல்ல. குறிப்பிட்ட காலம் மட்டுமே, ஹீரோயினாக நடிக்க முடியும். இன்னும் சில ஆண்டுகள் கழித்து, நாம் எந்தெந்த படங்களில் நடித்திருக்கிறோம் என்பதை திரும்பிபார்த்தால், அதில், நம் மனதுக்கு பிடித்த கேரக்டர்கள் இருக்க வேண்டும். அப்போது தான், ஒரு நடிகைக்கு திருப்தி ஏற்படும் என, தத்துவார்த்தமாக பேசுகிறார், லட்சுமி ராய்.