மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சினிமா கம்பெனிகளில் டிரைவராக வேலை பார்த்தவர் ஆர்.செந்தில்குமார். அவர் இப்போது படத் தயாரிப்பாளராகி இருக்கிறார். படத்தின் பெயர் "சிக்கி முக்கி". ஜித்தேஷ், நார்வே நகுலன், திஷா பாண்டே, சூரி, கஞ்சா கருப்பு நடித்துள்ளனர். ஸ்ரீகந்தராஜா இயக்கி உள்ளார். தயாரிப்பாளரானது பற்றி செந்தில்குமார் கூறியதாவது: 25 வருஷமா சினிமா கம்பெனிகளுக்கு கார் ஓட்டினேன். சினிமாவின் நெளிவு சுழிவெல்லாம் எனக்கு அத்துப்படி. அதான் நானும் படம் தயாரிக்க வந்துட்டேன். இந்தப் படம் முழுக்க மலேசியாவுல நடக்குது. ஒரே ஒரு பாட்டு மட்டுந்தான் சென்னையில நடக்குது. தமிழ்நாட்டு பொண்ணை மலேசிய டாக்டர் ஒருத்தர் கல்யாணம் பண்ணிக்கிட்டு மலேசியா கூட்டிட்டு போறார். அங்க ஒரு காமகொடுரன்கிட்ட மாட்டிக்கிட்டு எப்படி கஷ்டப்படுறாங்க. அவன்கிட்டேருந்து எப்படி தப்பிக்கிறாங்க என்பதுதான் கதை. இதுல காமகொடூரனா நடிக்கிறதுதான் ஹீரோ ஜித்தேஷ். பாதிக்கப்படுற பொண்ணா நடிக்கிறது பூஜா, அவரோட தங்கையாக வந்து பழிவாங்குறது திஷா பாண்டே. நிறைய பெட் ரூம் சீன் இருக்கு. சென்சார்ல 7 கட் கொடுத்து யூஏ கொடுத்திருக்காங்க. ஏப்ரல் 5ந் தேதி ரிலீஸ் பண்றோம். என்றார்.