அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! | துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் |
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி டைரக்ஷனில் இன்னும் பெயரிடப்படாத படம் உருவாகி வருகிறது. கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் காஷ்மீர் பகுதியில் இந்த படத்தின் மிக முக்கியமான காட்சிகளை படம் பிடித்து திரும்பியுள்ளனர் படக்குழுவினர்.
இந்த படத்தில் காஷ்மீர் பகுதியில் படமாக்கப்பட்ட காட்சிகளுக்காக சிவகார்த்திகேயன் தனது தலை முடியை நீளமாக வளர்த்து வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். அதனால் கடந்த சில மாதங்களாகவே தான் வெளியே கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ஒரு நீளமான குல்லா ஒன்றை அணிந்து தனது ஹேர்ஸ்டைல் வெளியே தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் தொப்பி எதுவும் அணியாமல் தனது வழக்கமான ஹேர்ஸ்டைலுடன் காட்சியளித்தார். இனி அந்த படத்திற்கு நீளமான தலைமுடி தேவையில்லை என்பதால் வழக்கமான தோற்றத்திற்கு மாறியுள்ளார் சிவகார்த்திகேயன்.