குட் நியூஸ் சொன்ன நிவேதிதா - சுரேந்தர் | ஓடிடியில் வந்தது 'வேட்டையன்': தாமதமாகும் 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | 50வது நாளில் 'லப்பர் பந்து' | தமிழகத்தில் 100 கோடி வசூலித்த 'அமரன்' | 'பான் இந்தியா', சூர்யாதான் இன்ஸ்பிரேஷன் - ராஜமவுலி பேச்சு | எளிமையாக நடைபெற்ற 'பிக்பாஸ்' பிரதீப் ஆண்டனி திருமணம்: நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் | ஏழு மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் அறிவிப்பு: ஆச்சரியப்படுத்திய 'தக் லைப்' | கனவுகள் உயிர்பெறுவதை பார்ப்பேன்: கமலுக்கு ஸ்ருதி நெகிழ்ச்சி வாழ்த்து | 'கங்குவா' வெளியீட்டுக்கு எதிரான வழக்கு, நாளை முடிவு தெரியும்? | 'கூலி, குட் பேட் அக்லி' - எப்போது ரிலீஸ் தெரியுமா? |
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது அவர் வீட்டில் இருந்த இரண்டு ஜோடி யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. அனுமதியின்றி யானைத் தந்தங்கள் வைத்திருப்பது குற்றம் என மோகன்லால் மீது வழக்கு பதியப்பட்டது. அதன்பிறகு மாநில அரசு மோகன்லால் மீதான இந்த வழக்கை கைவிடும்படி கேட்டுக் கொண்டதன் பேரில் கைவிடப்பட்டாலும் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பவுலோஸ் என்கிற நபர் மீண்டும் இதன் பெயரில் வழக்கு தொடர்ந்ததால் தற்போது பெரும்பாவூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக சத்தமின்றி அமுங்கி இருந்த இந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து வரும் நவம்பரில் மோகன்லால் இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் பெரும்பாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டது இந்த நிலையில் தற்போது எதிர்பாராத திருப்பமாக கேரள உயர்நீதிமன்றம் இந்த யானைத் தந்த வழக்கு குறித்த விசாரணையை ஆறு மாதத்திற்கு நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பெரும்பாவூர் நீதிமன்றமும் உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.