பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
மணிவண்ணன் இயக்கி வரும், "நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ என்ற படத்துக்கு,சத்யராஜ் நடிக்கும், 200வது படம் என்ற பெருமையும் உண்டு. இப்படத்தின் மூலம், கோமல் சர்மா என்ற புதுமுகம், கோலிவுட்டுக்கு அறிமுகமாகிறார். இவர், பிரபலமான ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனையும் கூட. இந்த படத்தில், அநீதி கண்டு பொங்கி எழும், வீரத்தமிழ் பெண் வேடத்தில் நடிக்கிறாராம், கோமல் சர்மா. அவர் கூறுகையில், "இந்த படத்துக்கு பின், தமிழில் எனக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இயக்குனர், ஹீரோ, யார் என்பது முக்கியமில்லை. நல்ல கதையுடன் கூடிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருக்கிறேன்என்றார். நடிப்புடன், ஜூனியர் ஸ்குவாஷ் விளையாட்டிலும், தொடர்ந்து பங்கேற்க உள்ளாராம்.