மைசூரு பண்ணை வீட்டில் தங்க நடிகர் தர்ஷனுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி | 'பரோஸ்' படத்திற்காக ஓவியப்போட்டி: குழந்தைகளுக்கு பரிசளித்த மோகன்லால் | எம்ஜிஆருடன் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் நடிக்க விரும்பும் சரத்குமார் | காலையில் அறிமுகமான மஞ்சு வாரியரின் கையால் மாலையில் விருது பெற்ற விஜய் சேதுபதி | நான் சுப்ரீம் ஸ்டாரா? : எனக்கே தெரியாது என்கிறார் சரத்குமார் | சினிமா தெரியாத கிராம மக்கள் உருவாக்கிய படம் 'பயாஸ்கோப்' | 'மிஸ்டர் பாரத்' ரஜினி பட கதையல்ல : இயக்குனர் விளக்கம் | அல்லு அர்ஜுன் வீடு மீது கல்வீசி தாக்குதல் | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் ஹிந்தி பாடல்கள் | பிளாஷ்பேக் : பவுத்த மத பின்னணியில் உருவான 'அசோக்குமார்' |
நடிகை பிரியாமணி திருமணத்திற்கு பின்னர் கதாநாயகியாக நடிக்காவிட்டாலும் செலெக்ட்டிவான படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ஜவான் திரைப்படத்தில் ஷாரூக்கானின் அதிரடி பெண்கள் படையின் தலைவியாக ஆக்ஷன் ரோலில் நடித்து அசத்தியிருந்தார். இவரது நடிப்பிற்கு பாராட்டுக்களும் குவிந்தன. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் ஐந்தாவதாக உருவாகி வரும் நேரு என்கிற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரியாமணி.
தற்போது நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். ஜீத்து ஜோசப்பின் முந்தைய திரில்லர் படங்களைப் போல அல்லாமல் இந்த படம் ஒரு நீதிமன்ற டிராமாவாக உருவாகி வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த 2011ல் வெளியான கிராண்ட் மாஸ்டர் என்கிற படத்தில் மோகன்லாலின் மனைவியாக நடித்திருந்தார் பிரியாமணி. அந்த வகையில் தற்போது 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார்.