கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான் | கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் | வடிவேலு ரீ-என்ட்ரி! சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு அதிர்ச்சி! | நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! ஹன்சிகாவிடம் கரைந்த கவர்னர் | ஷார்மியின் 12 வருடகலை சாதனை | இந்தியில் நடிக்க நேரமில்லை! - டாப்ஸி | ஒரே படத்தில் மூன்று சரவெடி |
பாப் இசை உலகின் மன்னன், மறைந்த, மைக்கேல் ஜாக்சனின் நடனத்தை பார்த்து, வியந்தவர்களுக்கு, அவரது, "மூன் வாக் டான்ஸ் பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். அவரது இந்த நடனம், மிகவும் பிரபலம். அவருக்கு பின், ஏராளமான நடிகர்கள், இதுபோன்ற நடனத்தை ஆடியிருந்தாலும், அவ்வளவாக எடுபடவில்லை.நம் நாட்டிலும், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, ஒரு படத்தில், இதுபோல் ஆடியிருந்தார். இப்போது, சோனாக்ஷி சின்காவின் முறை.
அஜய் தேவ்கன் - தமன்னா நடித்துள்ள,"ஹிம்மத்வாலா படத்தில், "தேங்க்ஸ் காட் எனத் துவங்கும், ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியுள்ளார், சோனாக்ஷி. இந்த பாடலில் தான், மைக்கேல் ஜாக்சனின்,புகழ் பெற்ற, "மூன் வாக் நடனத்தையும், ஆடியுள்ளாராம், அவர்.இந்த நடனத்துக்கான படப் பிடிப்பின்போது, துவக்கத்தில் சரியாக நடனமாட முடியாமல் திணறியிருக்கிறார், சோனாக்ஷி. "கொஞ்சம் ரிலாக்சாக நடனமாடுங்கள் என, இயக்குனர் கூறியதும், சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு வந்து, மைக்கேல் ஜாக்சன் போல் வெளுத்து வாங்கினாராம், சோனாக்ஷி.