Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாதகமான தீர்ப்பு வராவிட்டால் உண்ணாவிரதம் தொடரும்! உண்ணாவிரதத்தை முடித்த அமீர் பேட்டி!!

19 மார்,2013 - 11:52 IST
எழுத்தின் அளவு:

இலங்கை தமிழர் விவகாரத்தில், ஐ.நா.வில் கொண்டு வரப்பட இருக்கும் தீர்மானம் சாதகமாக இல்லாவிட்டால் தங்களது போராட்டம் தொடரும் என பெப்சி தலைவரும், இயக்குனர் சங்க பொதுச்செயலாருமான டைரக்டர் அமீர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரில் அப்பாவி தமிழகர்கள் சுமார் லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஏராளமான பேர் வீடுகளை இழந்து, உடமைகளை இழந்து வாழ கூட வழியின்றி தவித்து வருகின்றனர். இலங்கையில் நடந்த கொடூர தாக்குதல் சம்பவங்கள் குறித்து சேனல் 4 தொலைக்காட்சியும் அவ்வப்போது படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் 12வயது சிறுவன் பாலசந்திரன் கொடூரமாக கொல்லப்பட்ட போட்டோக்கள் இந்த பிரச்னையை விஸ்வரூபமாக்கியது. இதற்கிடையே ஜெனிவாவில் மனித உரிமைகள் மாநாடு நடைபெறுகிறது. இதில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர். .

மாணவர்கள் எழுச்சி : இதுநாள் வரை அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சிலர் மட்டுமே போராட்டம் நடத்தி வந்தநிலையில், சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் துவங்கி வைத்த போராட்டம் இன்று ஒட்டுமொத்த இந்திய மக்களையும் இலங்கை தமிழர்கள் விவகாரத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஜெனிவாவில் நடக்கும் சர்வதேச மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வலியுறுத்தியும், இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரியும் மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் திரையுலகினரும் இந்த போராட்டத்தில் களம் இறங்கியுள்ளனர்

இயக்குனர் சங்கம் போராட்டம் : தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் சென்னை வள்ளூவர் கூட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இலங்கை மீதான பொருளாதார தடை, ஐ.நா.வில் கொண்டு வரப்பட இருக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பது, தமிழர் பகுதியில் வசிக்கும் சிங்களர்களை உடனடியாக வெளியேற்றுவது, ராஜபக்ஷேயை போர்குற்றவாளியாக அறிவிப்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்துடன், தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம், பாடலாசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட 30 சங்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இளையராஜா பேசுகையில், இங்கு உண்ணாவிரதம் இருப்பவர்களின் உணர்வு என்னவாக இருக்கிறதோ, ‌அதே உணர்வு தான் தனக்கும் இருப்பதாக கூறினார். 

சரத்குமார் பேசுகையில், தனி ஈழம் அமைவதற்கான நேரம் தற்போது வந்துவிட்டது, இதுவே சரியான நேரம், உடனடியாக தனி ஈழம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.

போராட்டம் தொடரும் :
காலை முதல் நடந்த வந்த இந்த ‌உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணியளவில் முடிந்தது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார். பிறகு பேசிய டைரக்டர் அமீர், ஜெனிவாவில் நடக்கும் மாநாட்டில் சாதகமான தீர்ப்பு வராவிட்டால் தங்களது போராட்டம் தொடரும் என்றும், எந்த ஒரு அரசியல் கட்சியினரின் பேரில் இந்த போராட்டம் நடைபெறவில்லை என்றும், இது தமிழர்களின் உணர்வும் என்றும், இதை புரிந்து கொண்டு இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.

10ஆயிரம் பங்கேற்பு : இந்த உண்ணாவிரத ‌போராட்டத்தில் டைரக்டர் சங்கம், பெப்சி உள்ளிட்ட உறுப்பினர்களில் இருந்து சுமார் 10 ஆயிரம் பங்கேற்றதாக டைரக்டர் சுப்ரமணிய சிவா தெரிவித்துள்ளார். 5ஆயிரம் பேர் உண்ணாவிரத பந்தலிலும், மீதம் 5 ஆயிரம் போராட்டத்தில் பங்கேற்று விட்டு சென்றாக அவர் தெரிவித்தார்.

டைரக்டர் அமீர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் காலை 9 மணி முதலே ஏராளமான திரையுலகினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் இசைஞானி இளையராஜா, மூத்த டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், பாலுமகேந்திரா, மணிரத்னம், டைரக்டர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் மேனன், சிம்புதேவன், சசிகுமார், ஸ்டான்லி, எஸ்.பி.ஜனநாதன், பிரபுசாலமன், கே.வி.ஆனந்த், வஸந்த், ரமேஷ் கண்ணா, பாண்டியராஜன், பாலாஜி சக்திவேல், சுந்தர்ராஜன், தருண் கோபி, பாகன் டைரக்டர் அஸ்லாம், எழில், சரவணன் சுப்பையா, ராஜ்கபூர், பெப்சி விஜயன்,  தளபதி தினேஷ், நடிகைகள் சுஹாசினி, சத்யப்ரியா, குயிலி, பாடல் ஆசிரியை த‌ாமரை, விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் கேயார், நடிகர்கள் ஜெயம் ரவி, ஸ்ரீகாந்த், விமல், பிரசன்னா, கருணாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

நடிகர் சங்கம் தனி போராட்டம் : இன்றைய போராட்டத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, ஸ்ரீகாந்த், விமல், பிரசன்னா, கருணாஸ் உள்ளிட்ட ஒருசிலரை தவிர, நடிகர் சங்கத்தை சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் யாரும் பெருவாரியாக கலந்து கொள்ளவில்லை. நடிகர் சங்கம் தனியாக ஒரு போராட்டம் நடத்துவாக உள்ளார்கள், அதனால் ‌பெருவாரியான நடிகர்கள் பங்கேற்கவில்லை.

Advertisement
கடல் கெளதமை கழட்டி விட்டார் பிரபுசாலமன்!கடல் கெளதமை கழட்டி விட்டார் ... தயவு தேவைப்பட்டால் என்னிடம் வாருங்கள்! கவுண்டரின் நெத்தியடி!! தயவு தேவைப்பட்டால் என்னிடம் ...

வாசகர் கருத்து

GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
21 மார்,2013 - 01:02
GUNAVENDHAN யார் தான் உண்ணாவிரதம் இருப்பது என்று ஒரு விவஸ்த்தையே இல்லாமல் போய்விட்டது.
sevagan - chennai,இந்தியா
20 மார்,2013 - 12:23
sevagan இலங்கையில் நடந்த போரில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் . உண்ணாவிரதம் ஏதோ ஆபீஸ் வேலை மாதிரி காலை 9.00- மாலை 5.00....இருப்பதல்ல ..... அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார் ,.... நீங்கள் ???????????......சரி ..உங்களுக்கும் பல கடமைகள் உள்ளன..... ஒரு செயலில் பங்கேற்றால் முழு மனதுடன் செயல்படுங்கள் ......அதில் வெற்றி காணும் வரை .......ஜெய் ஹிந்த்
Poor Patriot - bangalore,இந்தியா
20 மார்,2013 - 09:19
Poor Patriot அப்படி உண்மையிலேயே உணர்வு இருப்பவர்கள் மாணவர்களுடன் போராட்டப்பந்தலில் கலந்து கொள்ள வேண்டியதுதானே. என் தனியாக உண்ணாவிரதம் ஒரே நாளில் ஆரம்பித்து அதே நாளில் முடிக்க வேண்டும். போராட்டமும் பண்ணின மாதிரி இருக்க்கனும். அப்படியே சங்கத்துக்கு பெரும் கிடைக்கணும். நல்ல உணர்வுடா...
primo - toronto,கனடா
20 மார்,2013 - 02:42
primo this is totally wrong we are indian, indian tamil not srilankan tamil. why some cinefield ppl support ltte. govt must act now to take out all ltte supports members in tamilnadu. it will become like naxal state. Otherwise only god can save tamilnadu .
விருமாண்டி - மதுரை,இந்தியா
20 மார்,2013 - 02:00
விருமாண்டி தயவு செய்து தாடியுடன் அமர வேண்டாம் .....
pudur mani - madurai,இந்தியா
19 மார்,2013 - 18:59
pudur mani நல்ல உணர்வு ,வெல்க தமிழன் போராட்டம் ,வாழ்க ரஜினி
Hari Doss - Pollachi,இந்தியா
19 மார்,2013 - 17:37
Hari Doss காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை தின்னாமல் இருப்பது உண்ணாவிரதம் இல்லை. இது போல் செயல் படுவது உன்னாவிரதத்தையே கேவலப் படுத்துவது ஆகும். அதற்குப் பதிலாக கருணா செய்தது போல் ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ தின்னாமல் இருந்து மிகப் பெரிய தொண்டாற்றுங்கள்.
Siva - Chennai,இந்தியா
19 மார்,2013 - 17:27
Siva யாரை நம்பினாலும் இயக்குனர் அமீரை நம்பாதீர்கள் .அவர் தமிழின ஆதரவாளர் கிடையாது .அவர் போடுவது வெறும் வேஷம் தான் .
rajesh - singapore,சிங்கப்பூர்
19 மார்,2013 - 16:44
rajesh பாரதிராஜா எங்கே ?
விருமாண்டி - மதுரை,இந்தியா
19 மார்,2013 - 16:33
விருமாண்டி இயக்குனர் அமீர் ஏன் தாடியுடன் இருக்கிறார் .. இவர் தன்னை அடையாளம் காட்டிகொல்கிரார ..?
itashokkumar - Trichy,இந்தியா
19 மார்,2013 - 15:31
itashokkumar அங்கு தமிழர்கள் செத்து மடிந்தபோது புல் மீல்ஸ் சாப்பிட்டு கொண்டு இருந்துவிட்டு. இப்போது என்னவோ ராஜபக்சேவிற்கு தூக்குதண்டனை வாங்கி தர போராடுவது போல போராட்டம் நடத்துவது. உடனே ஐக்கிய நாட்டு படை இலங்கைக்கு விரைந்து தனி ஈழம் அமைக்க போவது போலவும் நடிப்பது மிக மிக மிக மிக மிக மிக மிக சரியானது அல்ல.
A.S.VENKATESAN - Chennai,இந்தியா
19 மார்,2013 - 14:41
A.S.VENKATESAN மத்திய அரசில் இத்தாலியரை அமர வைத்துவிட்டு தமிழனுக்கு நீதி வேண்டும் என்றால் எப்படி முடியும் ?
அரசன் - madurai  ( Posted via: Dinamalar Android App )
19 மார்,2013 - 13:30
அரசன் நல்ல விஷயம்..வாழ்துகள்..மாணவர்களை போன்று நீண்ட நாள் உண்ணாவிரதம் இருந்தால் போராட்டம் வலிமை அடையும்..பேட்டி கொடுத்து விட்டு வழக்கம் போல், நல்ல செய்தி் கிடைத்து விட்டது என்று மாலை புரோட்டா தி்ண்ண சென்று விட்டால், சரியாகாது..வாழ்க தமிழர் ஒற்றுமை..வளரட்டும் மாணவர் வலிமை..ஒழியட்டும் ராஜபக்ஷேயின் பொய்மை.
Vaal Payyan - Chennai,இந்தியா
19 மார்,2013 - 12:08
Vaal Payyan நல்ல உணர்வு ... பாலா இத வச்சு ஒரு வலி தர படம் பண்ண வேண்டும் .. மக்கள் உணருவார்கள்
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Thani oruvan
  • தனி ஒருவன்
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Urumeen
  • உறுமீன்
  • நடிகர் : சிம்ஹா
  • நடிகை : அதிதி செங்கப்பா
  • இயக்குனர் :சக்திவேல் பெருமாள்சாமி
  Tamil New Film Ko 2
  • கோ 2
  • நடிகர் : பாபி சிம்ஹா
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :சரத்
  Tamil New Film Vaigai express

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in