Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடல் கெளதமை கழட்டி விட்டார் பிரபுசாலமன்!

19 மார்,2013 - 10:26 IST
எழுத்தின் அளவு:

மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கெளதம். நடிகர் கார்த்திக்கின் மகனான இவரை அந்த படத்துக்குப்பிறகு தனது படத்தில் நடிக்க வைப்பதாக கூறியிருந்தார் பிரபுசாலமன். அதனால் முதல் படம் திரைக்கு வரும்முன்பே இரண்டாவது படத்தில் கமிட்டாகி விட்ட மகிழ்ச்சியில் இருந்து வந்தார் கெளதம். மேலும், அடுத்த படத்துக்காக தனது உடல்கட்டையும் தயார்படுத்திக் கொண்டிருநதார். இந்த நிலையில், திடீரென்று ஒருநாள் கெளதம் எனது கதைக்கு பொருத்தமாக இருக்க மாட்டார். அதனால் வேறு நடிகரை வைத்து இயக்கப்போகிறேன் என்று தகவல் சொன்னாராம் பிரபுசாலமன்.

அதைக்கேட்டு, விக்ரம்பிரபுவுக்கு கொடுத்தது மாதிரி தனது மகனுக்கும் கும்கி மாதிரி ஒரு ஹிட் படத்தை பிரபுசாலமன் கொடுப்பார் என்று நம்பியிருந்த கார்த்திக் கடும் அதிர்ச்சிக்கு ஆளானாராம். இருப்பினும், மகன் இந்த பிரச்னையால் சோர்ந்துவிடக்கூடாதே என்பதறகாக அவசர அவசரமாக ஐஸ்வர்யா தனுஷ் , சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் ஆகியோர் இயக்கும் புதிய படங்களில் கெளதமை கதாநாயகனாக்கி விட்டார் கார்த்திக்.

அவரிடத்தில் திடீரென்று பிரபுசாலமன் இப்படியொரு முடிவு எடுக்க என்ன காரணம்? என்று கேட்டால், அரபு நாட்டில் வாழும் தமிழர்களில் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. அப்படத்துக்கு கெளதம் பொருத்தமாக இருப்பார் என்றுதான் முதலில் சொன்னார். கடல் படத்தின் ரிலீஸ் வரை அப்படி சொன்னவர், இப்போது அவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்கிறார். எங்களுக்குள் வேறு எந்த பிரச்னையும் கிடையாது. ஒருவேளை, கடல் படம் தோல்வி காரணமாககூட கெளதமை நடிக்க வைக்க யோசிக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால் சினிமாவில் வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்று என்பதை நான் அறிவேன். முதல் படம் தோல்வியடைந்த எத்தனையோ நடிகர்கள் பின்னர் முன்னணி நடிகர்களாகியிருக்கிறார்கள். இதனால் இந்த செண்டிமென்ட் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்கிறார் கார்த்திக்.

சொந்த படம் எடுக்கிறார் அமீர்! அஜீத்திடம் பேசி வருவதாக தகவல்!!சொந்த படம் எடுக்கிறார் அமீர்! ... சாதகமான தீர்ப்பு வராவிட்டால் உண்ணாவிரதம் தொடரும்! உண்ணாவிரதத்தை முடித்த அமீர் பேட்டி!! சாதகமான தீர்ப்பு வராவிட்டால் ...


வாசகர் கருத்து (5)

Ram - Singapore ,சிங்கப்பூர்
26 அக்,2013 - 06:35 Report Abuse
Ram இவருக்கு சம்பளம் 1 கோடியா ??
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Ananya Dixith - Pune,இந்தியா
20 மார்,2013 - 16:06 Report Abuse
Ananya Dixith இப்போ இவன் லா நடிக்கல நு யாராச்சும் அழுதாங்களா ???
Rate this:
2 members
0 members
1 members
Share this comment
itashokkumar - Trichy,இந்தியா
19 மார்,2013 - 15:37 Report Abuse
itashokkumar ஏன் அவருக்கு தாடியும் தலைமுடியும் பத்தலையா. ஆமாம் அதெல்லாம் அதிகமாக இருந்தால்தான் அவர்களை வைத்து அடர்ந்த காட்டில் கானக சுந்தரி மாதிரி காதல் படம் எடுப்பார். எந்த ஊரில் யானையை அடக்க போனவன் காதலித்து கொண்டு இருக்கிறான் அப்படி காதலித்தால் அது தின தந்தியில் கள்ள காதல் என்ற பெயரில் தான் வரும். சினிமாவில்தான் அதுக்கு இமானின் பாடல் வேறு. வெக்கமா இருக்குங்க.
Rate this:
17 members
2 members
11 members
Share this comment
Vaal Payyan - Chennai,இந்தியா
19 மார்,2013 - 12:09 Report Abuse
Vaal Payyan நல்ல வேள தமிழ் சினிமா தப்பிச்சுது ....
Rate this:
8 members
0 members
9 members
Share this comment
LAX - Trichy,இந்தியா
19 மார்,2013 - 11:57 Report Abuse
LAX ""ஐஸ்வர்யா தனுஷ் , சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் ஆகியோர் இயக்கும் புதிய படங்களில் கெளதமை கதாநாயகனாக்கி விட்டார் கார்த்திக்."" இதை கார்த்திக் முடிவு செய்ய முடியாது. ஐஸ்வர்யாதான் முடிவு செய்ய வேண்டும்.
Rate this:
2 members
0 members
20 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
தொடர்புடைய படங்கள்
தொடர்புடைய வீடியோக்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Virudaalam pattu
  Tamil New Film Kakki sattai
  • காக்கி சட்டை
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : ஸ்ரீ திவ்யா
  • இயக்குனர் :துரை செந்தில்குமார்
  Tamil New Film Kappal
  • கப்பல்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : சோனம் பஜ்வா
  • இயக்குனர் :கார்த்திக் ஜி.கிரிஷ்
  Tamil New Film Kathamma
  • காத்தம்மா
  • நடிகர் : ,பிஜூ
  • நடிகை : ,ஆதிரா
  • இயக்குனர் : ,எம்.டி.சுகுமார்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2014 Dinamalar , No. 1 website in Tamil. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in