ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! | விபசார அழகியாக நடிப்பதற்கு வெட்கப்படவில்லை! ஸ்ரேயா | ஹீரோக்களுக்கு இணையான நடிகரான பரோட்டா சூரி! | முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்ஷீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் | ஜப்பானின் டோக்கியோவில் கோச்சடையான் இசை வெளியீடு! |
தமிழ் திரையுலகில், இந்த நிமிடத்தில், ரொம்பவும் சந்தோஷமாகவும், பிசியாகவும் இருக்கும் நடிகை யார் என, கேட்டால், கண்களை மூடிக் கொண்டு, ஹன்சிகா மோத்வானியின் பக்கம், கை காட்டலாம். அந்த அளவுக்கு, ஏழு தமிழ் படங்களை, தன் கைவசம் வைத்துள்ளார், அவர்.இதுதவிர, இளம் சாதனையாளர் என்ற விருதும், அவருக்கு கிடைத்துள்ளதால், உற்சாகத்தில், ஊ.... லலலா... என, வலம் வருகிறார். ஹன்ஷிகாவின் தேதிக்காக பிரபல இயக்குனர்கள் கூட, காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
கடந்த, 40 நாட்களாக, ஒருநாள் கூட, இடைவெளி இல்லாமல், தொடர்ந்து படப் பிடிப்பில் பங்கேற்று வருகிறாராம். இதனால், தன் குடும்பத்தினரையே மறந்து விட்டாராம். "இன்று என்ன தேதி, என்ன மாதம் என்று, அவரிடம் கேட்டால் கூட, சின்னக் குழந்தை போல், "தெரியவில்லை என, கை விரிக்கிறாராம். ஆனாலும், தான் நடிக்கும் படங்களின் படப் பிடிப்புகளில் குழப்பம் வந்து விடக் கூடாது என்பதற்காக, சரியான நேரத்தில், படப் பிடிப்பு தளத்தில் ஆஜராகி, அனைவரின் விழிகளையும், ஆச்சர்யத்தில் விரிய விடுகிறாராம், ஹன்சிகா.