ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"ஏழாம் அறிவு படத்துக்கு பின், தமிழில் ஸ்ருதி ஹாசனுக்கு படம் இல்லை. ஆனால், அதையடுத்து அவர் நடித்த, "கப்பார் சிங் தெலுங்கு படம் ஹிட்டாக அமைந்ததால், அங்கு ஸ்ருதியின் மார்க்கெட் சூடு பிடித்தது. ஜூனியர் என்.டி.ஆர்., மகேஷ்பாபு மற்றும் "கப்பார் சிங் இயக்குனர் ஹரிஷ் ஷங்கரின் படம் என்று, கைநிறைய படங்களுடன் பிசியாகிவிட்டார்.
இந்த சமயத்தில், "நுவ் ஒஸ்தா என்ற தெலுங்கு படத்தை இந்தியில், ரீ-மேக் செய்யும் பிரபுதேவா, அப்படத்தில் நடிக்க ஸ்ருதி ஹாசனுக்கு அழைப்பு விடுத்தார். அதனால், அதன் பின் புதிய தெலுங்கு படங்களை ஏற்காத ஸ்ருதி, இந்தியில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டு, இப்போது "டி டே உட்பட மேலும் சில இந்தி படங்களை கைப்பற்றியிருக்கிறார். அதனால், இந்த ஆண்டு முழுக்க முழுக்க, இந்தி படங்களுக்கு டைட் கால்ஷீட் கொடுத்துள்ளார் ஸ்ருதி.