ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சசிகுமார் இயக்கத்தில் வெளியான, "சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தவர் ஸ்வாதி. அப்படம் வெற்றி பெற்ற போதும், அதன்பின், புதிய படங்கள் அவருக்கு கமிட்டாகவில்லை. பின், தான் நடித்த,"போராளி படத்தில், மீண்டும் அதே சசிகுமாரே ஸ்வாதிக்கு சான்ஸ் கொடுத்தார். அதை தொடர்ந்து இப்போது, விஜய சேதுபதி நடிக்கும், "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் நடிக்கிறார் ஸ்வாதி. இதே படத்தில் இன்னொரு ஹீரோயினாக, "அட்டகத்தி நந்திதாவும் நடித்த போதும், ஸ்வாதியே மெயின் ஹீரோயினாக வருகிறாராம். மேலும், முதன்முறையாக இப்படத்தில் காமெடி காட்சிகளிலும் நடித்துள்ளாராம். அதனால், "இதற்கு முன் நடித்த படங்கள், எனக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பெற்றுத்தராத பெயரை, இந்தப்படம் பெற்றுத் தரும் என்கிறார், ஸ்வாதி.