மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
வினய், லட்சுமிராய், சத்யன், அரவிந்த் ஆகாஷ் நடித்துள்ள படம் "ஒன்பதுல குரு". வருகிற 8ந் தேதி ரிலீசாகிறது. ஒரே காலனியில் வசிக்கும் நான்கு நண்பர்கள், ஒருவரைவிட இன்னொருவர் பணக்காரராக வேண்டும் என்று போட்டி போடுவார்கள். ஆனால் உண்மையில் உழைக்காமல் ஒருவரை கவிழ்த்து இன்னொருவர் முன்னேற நினைப்பார். அவர்களுக்கு இடையில் ஒரு பெண் நுழைய நண்பர்களின் லட்சியம் மாறிவிடும். இப்படி காமெடியாக கதை சொல்லும் படம். இதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது என்று இயக்குனர் பி.டி.செல்வகுமார் அறிவித்திருக்கிறார். நான்கு நண்பர்களில் ஒருவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் பொறாமைப்படும் மற்ற நண்பர்கள். அவர்களை சந்தோஷமாக வாழ விடாமல் பிரிக்க முயற்சிப்பதும். அதை அவர்கள் சமாளிப்பதும் இரண்டாம் பாகத்தின் கதையாம். முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்களாம். முதல் பாகத்தில் காமெடியனாக நடித்த சத்யன் இரண்டாம் பாகத்தில் வில்லனாம். ஒரு பாட்டுக்கு ஆடிய பவர் ஸ்டார். புதுமண தம்பதிகளின் ஆலோசகராக நடிக்கிறாராம். நண்பர்கள் போடும் திட்டத்தை முறியடித்து தம்பதிகளை காப்பது பவரின் வேலையாம்.