மலையாளத்தில் ரீமேக் ஆகும் 'ஆதார்' | பாயல்ராஜ் புத்துக்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் | சூரியின் மாற்றம் பிரமிக்க வைக்கிறது : விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் புகழாரம் | தனியார் தீவிற்கு ஹனிமூன் சென்ற ரகுல் ப்ரீத் சிங் | சாதாரண ஹோட்டலில் சாப்பிட்ட அல்லு அர்ஜுன் | விஜய் சேதுபதி - ராம் கோபால் வர்மா சந்திப்பு | 'தேவர் மகன்' - ரீ-ரிலீஸ் செய்ய திட்டம்? | விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? |
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை கண்காட்சி சென்னையில் நடந்தது. இதனை கமல் தொடங்கி வைத்தார், ரஜினி சென்று பார்த்தார். தற்போது இந்த கண்காட்சி மதுரையில் நடக்கிறது. அந்த பகுதியில் படப்பிடிப்பில் இருக்கும் விஜய்சேதுபதி இதனை நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: முதல்வரின் 70 ஆண்டுகால வாழ்க்கையை இந்த கண்காட்சியில் பார்த்தேன். இன்றைய இளைஞர்கள் இதை பார்த்தால் முதல்வரை பற்றிய புரிதல் ஏற்படும். அவர் வாரிசு காரணமாக முதல்வராகவில்லை. கடும் உழைப்பால் முதல்வரானார் என்பது தெரியும். இன்றைய இளைஞர்கள் அரசியலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். எனக்கும் அரசியல் பற்றி தெரியும். ஆனால் நேரடி அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.