நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் பெரும் வெற்றி பெற்று 500 கோடி வரை வசூலித்தது. தற்போது அதன் 2ம் பாகம் வெளிவர இருக்கிறது. இதுவும் 500 கோடி வரை வசூலிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகத்தில் உள்ள லைக்கா அஜித் படம் உள்ளிட்ட பல படங்களை புதிதாக தயாரிக்கிறது. ஏற்கெனவே பெரிய பட்ஜெட்டில் இந்தியன் 2 படத்தை தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியீட்டை முன்னிட்டு லைகா நிறுவனத்தின் சேர்மன் சுபாஷ்கரன் இந்தியா வந்துள்ளார். அவரது முன்னிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு லைகா நிறுவனம் சார்பில் 50 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. இதனை தற்போதைய சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி, துணை தலைவர் கதிரேசன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.