மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தெலுங்கு திரையுலகமே ஆச்சரியமாக பார்க்கும் ஒரு விஷயம் தற்போது பவன் கல்யாணை வைத்து தமிழ் இயக்குனர் சமுத்திரக்கனி படம் இயக்கி வருவதும், அந்த படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடைபெற்று வருவதையும் தான். காரணம் இதற்கு முன்பாக இயக்குனர் கிரிஷ் டைரக்ஷனில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பவன் கல்யாண் நடித்து வரும் ஹரிஹர வீரமல்லு திரைப்படம் இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. அதைத்தொடர்ந்து அவரது படத்தை இயக்குவதற்காக இயக்குனர் ஹரிஷ் சங்கர் காத்திருக்கும் நிலையில் திடீரென சமுத்திரக்கனியின் டைரக்ஷனில் பவன் கல்யாண் நடிப்பதாக வெளியான அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியான தகவலாக தான் இருந்தது.
தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான வினோதய சித்தம் என்கிற படத்தின் கதை பவன் கல்யாணுக்கு பிடித்து போக, இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க விருப்பப்பட்ட பவன் கல்யாண் தெலுங்கிலும் சமுத்திரக்கனியையே இயக்க சொல்லிவிட்டார். இந்த படத்தில் பவன் கல்யாணுடன் இளம் நடிகர் சாய் தரம் தேஜ் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது பவன் கல்யாண் சம்பந்தப்பட்ட வசன காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன என்கிற தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் சமுத்திரக்கனி. வரும் ஜூலை 28ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.