நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

லவ் டுடே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பிரதீப்பை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். இதையடுத்து ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த கொரோனா குமார் படத்தில் ஒரு சில காரணங்களால் சிம்பு விலக, அவருக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் இப்படத்தில் நடிக்கவுள்ளார். முன்னதாக இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க ஒப்பந்தமானார். சிம்பு விலகிய நிலையில் பிரதீப் உடன் ஜோடியாக நடிக்க அதிதி தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி, சிவகார்த்திகேயன் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் அதிதி ஷங்கர், வளர்ந்து வரும் நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் ஜோடி சேருவதில் தயங்குகிறாராம்.
அதேசயம் இதுபற்றி படக்குழு தரப்பில் விசாரித்தால் கொரோனா குமார் படம் தொடர்பாக எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கின்றனர்.