நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தெலுங்கில் இயக்கி வரும் படத்திற்குப் பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. படத்தின் கதாநாயகனாக ராம்சரண் பட எண்ணிக்கையைக் குறிப்பிடும் விதத்தில் 'ஆர்சி 15' என அழைக்கப்பட்டு வந்த படத்தின் பெயரை இன்று(மார்ச் 27) ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவித்துள்ளனர்.
'கேம் சேஞ்சர்' என படத்திற்குப் பெயர் வைத்து அதற்கான மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள். முதலில் இப்படத்திற்கு 'சிஇஓ' எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அவையனைத்தையும் பொய்யாக்கி புதிய பெயரை அறிவித்துள்ளார்கள். மோஷன் போஸ்டர் காட்சிகள் அனைத்தும் அரசியல் தொடர்பான கிளிப்பிங்காக உள்ளன. எனவே இந்தப்படம் நிச்சயம் அரசியல் சார்ந்து பேசப்போகும் படம் என தெரிகிறது.
கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க எஸ்ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராம் சரண் நடித்து வெளிவரும் படம் என்பதால் பான் இந்தியா படமாக இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.