பாடகி கெனிஷாவுடன் என்ட்ரி கொடுத்த ரவி மோகன்- ஆர்த்திக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா - குஷ்பூ! | கமலின் 237வது படத்தை இயக்கும் அன்பறிவ் பிறந்த நாள் - வீடியோ வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்! | ரஜினி அடுத்த பட ரேசில் வினோத், அருண்குமார்! | சிவாஜி குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகர்! | சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மோகன்லால்? | பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது |
சின்னத்திரையில் ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. தற்போது ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் நடித்து வருகிறார். பிரியங்காவுக்கு முன்னதாக ராகுல் வர்மா என்ற தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் அதன்பின் அந்த திருமணம் நின்றுவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், பலருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் பிரியங்காவும், ராகுல் வர்மாவும் திடீரென கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். அதன்புகைப்படங்களை பிரியங்கா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இந்த திருமணத்தில் இருவரது பெற்றோர்களோ, நண்பர்களோ கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் தான் பிரியங்காவின் சகோதரியின் திருமணம் கோலகலமாக நடந்தது. அதேபோல் பிரியங்காவின் திருமணமும் பிரம்மாண்டமாக நடைபெறும் என பலரும் நினைத்திருந்த வேளையில், பிரியங்காவும் ராகுலும் திடீரென ரகசிய திருமணம் செய்துள்ளனர்.