நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மு .மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா இணைந்து நடித்துள்ள சஸ்பென்ஸ் திரில்லர் படம் கண்ணை நம்பாதே. இப்படத்தில் ஆத்மிகா, பூமிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கடந்த 17ஆம் தேதி திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியான ஆத்மிகா, கண்ணை நம்பாதே படத்தை 90 வயதை கடந்த தனது தாத்தாவுடன் பார்த்து மகிழ்ந்திருக்கிறார். அதோடு தனது பேத்தி நடித்த படத்தை பார்ப்பதற்கு தியேட்டர் படிக்கட்டுகளில் அவர் ஆர்வமுடன் ஏறி வந்திருக்கிறார்.
இது குறித்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள ஆத்மிகா, ‛‛90க்கும் அதிகமான வயது கொண்ட எனது தாத்தா, அவரது பேத்தி படத்தை பார்க்க சிரமமின்றி படிக்கட்டுகளில் ஏறினார். விலைமதிப்பற்ற இந்த தருணங்கள் என்றென்றும் எனக்கு பொக்கிஷமாக இருக்கும் என்று பதிவிட்டு இருக்கிறார் ஆத்மிகா .