500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
'தமிழ் படம் 2' மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இப்படத்தைத் தொடர்ந்து 'நான் சிரித்தால்', 'வேழம்', ' தமிழ் ராக்கர்ஸ். படங்களில் நடித்தார். தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையாததால் தற்போது தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது தெலுங்கில் பான் இந்திய படமாக தயாராகும் 'ஸ்பை' எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் நாயகனாக நிகில் சித்தார்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார். பான் இந்திய படைப்பாக தயாராகி வருவதால் இந்த படம் தமிழிலும் வெளியாகும்.
இதனைத் தொடர்ந்து 'வலிமை' படத்தில் வில்லனாக நடித்த கார்த்திகேயா நடிப்பில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த இரண்டு படங்களை தவிர்த்து, மேலும் சில படங்களில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தெலுங்கில் பிசியாகிவிட்ட ஐஸ்வர்யா மேனன் தமிழ் பட வாய்ப்புகளையும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்.