500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படங்களில் எல்லாம் பெரும்பாலும் அவருக்கு பெரிய அளவில் புகழை தேடி தருவது அவருக்கு அமையும் சூப்பர் ஹிட் பாடல்களும் அதில் அவர் ஆடி இருக்கும் நடனமும் தான். அந்த வகையில் குறுகிய காலகட்டத்திலேயே தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக மாறிவிட்ட ராஷ்மிகா, தற்போது பாலிவுட்டிலும் நுழைந்து படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம் கடந்த 2021ல் வெளியான புஷ்பா படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா அந்த படத்தில் ஆடிய சாமி சாமி பாடல் மற்றும் அந்த பாடலுக்கு அவர் கொடுத்திருந்த வித்தியாசமான நடன அசைவுகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன.
அவர் எந்த விழாக்களுக்கு சென்றாலும் அங்கே அந்த பாடலுக்கு சில நிமிடங்களாவது, குறிப்பாக அந்த வித்தியாசமான நடன அசைவுகளுடன் அவரை ஆடச்சொல்லி கேட்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் உரையாடிய ராஷ்மிகாவிடம் ரசிகர் ஒருவர் நான் உங்களை நேரில் சந்திக்கும்போது நீங்கள் என்னுடன் சேர்ந்து சாமி சாமி பாடலுக்கு ஸ்டெப்ஸ் போட வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, “இந்த பாடலுக்கு போதும் போதும் என்கிற அளவிற்கு பலமுறை ஆடிவிட்டேன். இனிமேல் இந்த பாடலுக்கு ஆடப்போவதில்லை என முடிவு செய்துள்ளேன். ஆனால் ஒருவேளை உங்களை நான் நேரில் சந்திக்கும்போது வேறு ஏதாவது விஷயங்களை பண்ணுவோம்” என்று பதில் அளித்துள்ளார்.