நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமா சண்டை இயக்குனர் ஜெயந்த். 'முந்தல்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இது கம்போடியாவில் உள்ள அங்கோவாட் கோவிலில் படமான சண்டை படம். தற்போது அவர் இயக்கி வரும் படம் 'வெங்கட் புதியவன்'. இந்த படத்தில் வெங்கட் என்ற புதுமுகம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியா சில்பா நடிக்கிறார். இவர்களுடன் அழகு, மீசை ராஜேந்திரன், வெங்கல்ராவ், தசரதன் ஆகியோர் நடிக்கிறார்கள். பீட்டர் ஒளிப்பதிவு செய்கிறார், விஷால் தியாகராஜன் இசை அமைக்கிறார்.
படம் பற்றி ஜெய்ந்த் கூறியதாவது: அநியாயத்தை கண்டு பொங்கி எழும் காவல் அதிகாரியின் கதை. கதாநாயகன் வெங்கட் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே கன்னட படங்களில் நடித்துள்ளார். தமிழுக்கு அறிமுகமாகிறார். கள்ளச்சாராயம் மற்றும் பெண்களை கடத்தும் பெரிய மனிதர்களை இந்தப் படம் தோலுரித்து காட்டுகிறது. என்றார்.