நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சென்னை : இஸ்ரேலியா திரைப்பட விழா சென்னையில் மார்ச் 23ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடக்க உள்ளது. இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் இஸ்ரேலிய திரைப்பட விழா சென்னை மந்தைவெளி ராஜா அண்ணாமலைபுரம் இசைக்கல்லுாரி சாலையில் உள்ள தாகூர் பிலீம் சென்டரில் மார்ச் 23ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.
மார்ச் 23ம் தேதி மாலை 7:00 மணிக்கு துவக்க விழா நடக்கிறது. இதில் தென்னிந்தியாவுக்கான இஸ்ரேலிய துாதர் டாமி பென் - ஹெய்ம், துணை துாதர், இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் தலைவர் சிவன் கண்ணன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் ரவி கொட்டரக்கரா உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
இதில் ஒன் வீக் அன்ட் எ டே, தி டெஸ்டமென்ட், பர்கிவ்னஸ், அபுலேலே உள்ளிட்ட பாராட்டு பெற்ற படங்கள் திரையிடப்பட உள்ளன. படங்கள் தினமும் மாலை, 6:00, 7:30 மணியளவில் திரையிடப்பட உள்ளன.