மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் | 'ராமாயணா' படத்திற்கு புதிய சர்ச்சை | 2024ன் முதல் வசூல் படமாக 'அரண்மனை 4' | அஸ்வினியின் 'கங்கணம்' | பய்யா ஜி: மனோஜ் பாஜ்பாயின் 100வது படம் | வெற்றி நடிக்கும் 'ஆண்மகன்' | ராயன் : தனுஷ் பாடிய ‛அடங்காத அசுரன்' பாடல் வெளியீடு | விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் விருது : மனைவி பிரேமலதா பெற்றார் | சல்மான்கானுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா |
ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிலம்பரசன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பத்து தல'. இந்த மாதம் 30ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு சனிக்கிழமை இரவு யு-டியுபில் வெளியிடப்பட்டது.
24 மணி நேரங்களில் இந்த டிரைலர் 14 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. சிம்பு நடித்து வெளிவந்த படங்களின் டிரைலர்களில் முதல் முறையாக புதிய சாதனையைப் படைத்துள்ளது. 24 மணி நேரங்களில் 'வாரிசு' டிரைலர் 32 மில்லியன், 'பீஸ்ட், துணிவு' டிரைலர்கள் 30 மில்லியன், 'பிகில்' டிரைலர் 19.5 மில்லியன், 'வலிமை' டிரைலர் 17 மில்லியன் என முன்னணியில் உள்ளன. இப்போது 'பத்து தல' டிரைலர் 14 மில்லியன்களைப் பெற்று டாப் 5ல் இடம் பிடித்துள்ளது.
இரண்டு வாரம் முன்பு வெளியான 'பத்து தல' டீசர் 12 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்ற நிலையில் இப்போது டிரைலருக்கு அதை விட அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.