நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்த வாரம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான விருதையும், 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற தமிழ் டாகுமென்டரி படம், சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதையும் பெற்றது.
ஆஸ்கர் விருது விழா நடைபெற்ற டால்பி அரங்கில் விழா நடந்த போது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இயக்குனர் ராஜமவுலியின் குடும்பத்தினர் கடைசி வரிசையில் வெளியே செல்லும் கதவருகில் அமர்ந்திருந்தனர். அது குறித்து சர்ச்சையைக் கிளப்பியிருந்தனர் தெலுங்கு சினிமா ரசிகர்கள். இப்போதுதான் அது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
விழாவில் 'நாட்டு நாட்டு' பாடலுக்காக விருது வாங்கிய கீரவாணி அவரது மனைவி, பாடலாசிரியர் சந்திரபோஸ் அவரது மனைவி ஆகியோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாம். ராஜமவுலி அவரது மனைவி, அவரது மகன், மருமகள், ஜுனியர் என்டிஆர் அவரது மனைவி, ராம் சரண் அவரது மனைவி ஆகிய அனைவரும் விழாவில் கலந்து கொள்ள 25 ஆயிரம் யுஎஸ் டாலர் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கித்தான் விழாவில் கலந்து கொண்டார்களாம். 25 ஆயிரம் யுஎஸ் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 20 லட்ச ரூபாய். டிக்கெட்டுக்காக மட்டுமே 'ஆர்ஆர்ஆர்' குழுவினர் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்திருக்கிறார்கள்.