பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வீஜே தீபிகா தனக்கு மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரம் கிடைத்தது குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தீபிகா நடித்து வந்த போது அவர் முகத்தில் அதிக பருக்கள் இருந்ததன் காரணமாக நீக்கப்பட்டார். அதன்பிறகு ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்ரி அண்மையில் சீரியலிலிருந்து திடீரென விலகினார். இதற்கிடையில் தீபிகாவும் முகத்திற்கு ட்ரீமெண்ட் எடுத்து சில சீரியல்கள், ஷார்ட் பிலிம்கள் என நடித்து வருகிறார். எனவே, தீபிகாவையே மீண்டும் ஐஸ்வர்யாவாக நடிக்க வைத்துள்ளனர். தற்போது இழந்த வாய்ப்பு மீண்டும் கிடைத்த சந்தோஷத்தில் நெகிழ்ச்சியாக வீஜே தீபிகா பதிவிட்டுள்ளார். அதில், 'ஒருபொருள் நம்மகிட்ட இல்லாதபோதுதான் அதோட வலி என்னனு நமக்கு புரியும். இப்போ அது திரும்ப கிடைச்சிருக்கு. அதோட அருமை எனக்கு நல்லாவே தெரியும்' என்று அதில் தெரிவித்துள்ளார்.