நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்த ஜோதா அக்பர் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்தவர் அமன் தலிவால். பஞ்சாப்பை சேர்ந்த இவர் அஜ் தே ராஞ்சே, சகா - தி தியாகிகள் ஆப் நங்கனா சாஹிப், டிஎஸ்பி தேவ் மற்றும் கிஸ்ஸா பஞ்சாப் போன்ற பஞ்சாபி படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சொந்த பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் அமன் தலிவால். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் அமன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஜிம்மிற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்தவர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டினார். இதன் பின் நடிகர் அமன் தலிவாலை அந்த நபர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனால் அவர் படுகாயமடைந்தார்.
அமனை கத்தியால் குத்தியவர் யார், எதற்காக குத்தினார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் பாலிவுட் நடிகர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமன் கத்தியால் குத்தப்படும் வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.