நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகி வெளியான படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பான் இந்திய திரைப்படமாக உருவான இந்த படம் கடந்த ஆண்டு வெளியானது. உலகம் முழுவதும் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
உலகளவில் பல விருதுகளை குவித்து வந்த இந்த படம் நாட்டு நாட்டு பாடலுக்காக கோல்டன் குளோப் விருதை பெற்றது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்கர் விருதையும் இந்தபாடல் வென்றது.
இந்நிலையில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகம் பற்றி அப்டேட் ஒன்றை ராஜமவுலி கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயமாக உருவாகும். விரைவில் இந்த படத்தின் பணிகளை தொடங்க முடிவெடுத்துள்ளேன். இசையமைப்பாளர் கீரவாணி சொன்ன ஒன்லைன் என்னை கவர்ந்துள்ளது. அதைப்பற்றி தந்தையிடம் கூறி கதையாக உருவாக்க திட்டமிட்டுள்ளேன். அவர் கதையை எழுதி முடித்த பிறகு அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும் என கூறியுள்ளார்.