நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை நடிகையான பரீனா ஆசாத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமானார். பாரதி கண்ணம்மா தொடரில் வில்லி வெண்பா கதாபாத்திரம் இவருக்கு அதிக புகழை தேடி தந்தது. இதன்மூலம் இவருக்கு சோஷியல் மீடியாவிலும் அதிக ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பரீனா நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே அவரை திட்டிக்கொண்டும், இதை செய்யக்கூடாது, அதை செய்யக்கூடாது என்று ஆர்டர் போட்டுக் கொண்டும் சிலர் இருக்கின்றனர். அவர்களுக்கு பரீனாவும் அவ்வப்போது தக்க பதிலடி கொடுத்து வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒருநபர் பரீனா ஹராம்(தவறான செயல்) செய்வதாக குற்றம் சொல்லியிருந்தார். அதற்கு அவர் ஸ்டைலிலேயே, 'சோஷியல் மீடியாவில் இருப்பதும், டிவி சீரியல் பார்ப்பதும், செலிபிரேட்டிகளை பாலோ செய்து கேள்விகள் கேட்பதும் தான் முதலில் ஹராம் லிஸ்டில் வரும். முதலில் உங்கள் முதுகை கழுவுங்கள் பிறகு என்னை கேள்விகள் கேட்கலாம்' என தக்க பதிலடி கொடுத்து அனுப்பியுள்ளார்.