நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியான படம் அயோத்தி. வடநாட்டில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வரும் ஒரு சாதாரண குடும்பத்தினர், வந்த இடத்தில் தங்களது குடும்பத்தலைவியை பறிகொடுத்து விட்டு, அவரது உடலுடன் ஊர் திரும்ப அவதிப்படுவதும், நாயகன் சசிகுமார் பல இன்னல்களை சந்தித்து அவர்களுக்கு உதவுவதும் என மனிதநேயம் பற்றி இந்த படம் பேசியிருந்தது. இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்தது. சசிகுமார் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவருக்கு ஒரு கவுரவமான வெற்றி படமாகவும் இது அமைந்தது. இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் கதை எழுதிஇருந்தார்.
அதேசமயம் படம் வெளியாகி சில நாட்கள் கழித்து இந்த படத்தின் கதை தான் 2011ல் தனது வலைப்பக்கத்திலும் மேலும் தனது முகநூல் பக்கத்திலும் தான் எழுதிய, தனது நண்பர் ஒருவருக்கு நிகழ்ந்த உண்மை சம்பவத்தை, அப்படியே தழுவி எடுக்கப்பட்டுள்ளது என எழுத்தாளர் மாதவராஜ் என்பவர் புகார் தெரிவித்தார்.. ஆனால் இது பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் தரப்பிலிருந்து பதில் வராவிட்டாலும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மந்திரமூர்த்தி ஆகியோர் இந்த விஷயத்தை பெரிதாக்க விரும்பவில்லை.
இந்த நிலையில் இந்த கதையை எழுதியதாக சொல்லப்படும் மாதவராஜை அழைத்து தயாரிப்பாளர், இயக்குனர் மந்திரமூர்த்தி இருவரும் அவரிடம் பேசி இந்த படம் ஓடிடியில் வெளியாகும் போது சம்பந்தப்பட்டவர்களுக்கு டைட்டில் கார்டில் அவர்களது பெயருக்கு அங்கீகாரம் கொடுப்பதாக கூறி உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து இந்த கதை விவகாரம் தற்போது சுமூக முடிவுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.