ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
'வெந்து தணிந்தது காடு' படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பத்து தல'. இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கவுதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிருஷ்ணா இயக்கியுள்ளார். கன்னடத்தில் சூப்பர் ஹிட் அத்த 'முப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி உள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கிடையே வரவேற்பை பெற்றது. அடுத்து பத்து தல படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா வருகிற மார்ச் 18ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல திரை பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர். ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.