நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சமந்தா நடித்து முடித்துள்ள படம் 'சாகுந்தலம்'. புராணத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை குணசேகரன் இயக்கி உள்ளார். சமந்தாவுடன் தேவ் மோகன், சச்சின் கடேகர், மோகன்பாபு, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மணிசர்மா இசை அமைத்துள்ளார்.
காளிதாசர் எழுதிய 'சாகுந்தலம்' என்ற புராணக் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இதில் சாகுந்தலையாக சமந்தாவும், துஷ்யந்தனாக தேவ்மோகனும் நடித்துள்ளனர். படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை படக்குழுவினருடன் பார்த்த சமந்தா அதுபற்றி தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது : சாகுந்தலம், அருமையான படம். குணசேகர் சார் என் இதயத்தை வென்றுவிட்டீர்கள். நமது காவியங்களில் ஒன்றான இந்தக் கதையை அழகாக எடுத்திருக்கிறீர்கள். இதன் உணர்ச்சிகரமான காட்சிகளைக் கண்டு பார்வையாளர்கள் குடும்பமாக நிச்சயம் மகிழ்வார்கள். குழந்தைகளும் இந்த மாய உலகத்தை ரசிக்கப் போகிறார்கள். இந்த அற்புதமான பயணத்துக்காக, தில் ராஜுக்கும் நீலிமாவுக்கும் (தயாரிப்பாளர்கள்) நன்றி. இந்தப் படம் எப்போதும் எனக்கு நெருக்கமான படமாக இருக்கும். என்று எழுதியுள்ளார்.