ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
எதிர்நீச்சல் நடிகை ஹரிப்ரியா, அந்த தொடரில் வரும் வில்லனை போல நிஜ வாழ்க்கையில் பெண்களுக்கு ஆயிரம் குணசேகரன்கள் வருவார்கள் என்றும், அவர்களை கண்டு பயந்து ஓடாமல் போராட வேண்டும் என்றும் அறிவுரை செய்துள்ளார்.
சின்னத்திரை நடிகை ஹரிப்ரியா தொலைக்காட்சி சீரியல்கள் நடிப்பதுடன் சிறப்பு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். தற்போது 'எதிர்நீச்சல்' தொடரில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் காமெடி கலந்த நடிப்புடன் பட்டையை கிளப்பி வருகிறார். இதற்கு முன்பே இவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் நந்தினி கதாபாத்திரம் இவருக்கு பெரிய புகழை பெற்று தந்துள்ளது. கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற ஹரிப்ரியா தற்போது தனது கேரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'குணசேகரன் மாதிரி ஒருத்தர் உங்கள் வாழ்க்கையில் இல்லையென்றால் நீங்கள் கண்டிப்பாக ஆசிர்வதிக்கப்பட்டவர். வெளியில் நம்மைச் சுற்றி ஆயிரம் குணசேகரன்களும், கதிர்வேல்களும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் சமாளித்து தான் ஒவ்வொரு நாளையும் நாம் கடந்து செல்ல வேண்டும். குணசேகரன் போன்றோர்களை பார்த்து பயந்து ஓடக்கூடாது. பாரதியார் சொன்னது போல் ரெளத்திரம் பழக வேண்டும். யாருக்காகவும் நம் உரிமையை விட்டுக்கொடுக்ககூடாது. எதிர்த்து போராட வேண்டும்' என்று அறிவுரை செய்துள்ளார்.