நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இந்திய திரையுலக கலைஞர்களுக்கு அளிக்கப்படும் சர்வதேச விருதுகளில் ஐபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருதும் ஒன்று. சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற ஹிந்தி திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் ஐபா விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டிற்கு சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கான பிரிவில் விருது பெறும் கலைஞர்களின் பட்டியலை விருது குழு வெளியிட்டிருக்கிறது. அதில் சிறந்த பின்னணி இசைக்கான பிரிவில் ஹிந்தியில் வெளியான 'விக்ரம் வேதா' படத்திற்காக இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். வருகிற மே மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் சாம் சி. எஸ்ஸிற்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழில் வெளியான 'விக்ரம் வேதா' படத்திற்காக சாம் சி எஸ் ஸிற்கு ஏராளமான விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.