நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மத்திய பிரசேத மாநிலம் போபாலை சேர்ந்தவர் சிம்லா பிரசாத். 2010ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான இவர் தற்போது அந்த மாநிலத்திலேயே பணியாற்றி வருகிறார். இவரது தாயார் மெஹ்ருன்னிஷா ஒரு எழுத்தாளர், தந்தை பகீரத் பிரசாத் முன்னாள் போலீஸ் அதிகாரி. நடிப்பு, நடனத்தில் ஆர்வம் கொண்ட சிம்லா தந்தையின் விருப்பதிற்காக ஐபிஎஸ் முடித்தார். தற்போது போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார்.
'அலிப்' படத்தில் ஷம்மி என்ற கேரக்டரில் நடித்தார். 2017ம் ஆண்டு அந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. பின்னர் 2019ம் ஆண்டில் வெளியான 'நாகாஷ்' என்ற படத்தில் பத்திரிக்கையாளராக நடித்திருந்தார். இவர் கூறுகையில் ''எனக்கு சிறு வயதில் இருந்தே நடனம் மற்றும் நடிப்பு மீது விருப்பம் இருந்தது. சிவில் சர்வீசஸ் பணியில் சேர வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. அந்த தேர்வை எழுதுவேன் என்று ஒருபோதும் நினைத்ததும் இல்லை. ஆனால் எனது வீட்டின் சூழ்நிலைதான் ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்ற விருப்பத்தை எனக்குள் விதைத்தது. தற்போது எனக்குள் இருக்கும் கலை ஆர்வத்தை நிறைவு செய்யும் வகையில் சிறப்பு அனுமதி பெற்று நடித்து வருகிறேன்”. என்கிறார்.