நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்க நேரப்படி மார்ச் 12ம் தேதி ஞாயிறு இரவு(இந்தியாவில் இன்று காலை) நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விருதுகளில் இந்தியா சார்பில் இரண்டு விருதுகளை வென்றுள்ளார்கள். 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற தமிழில் தயாரான டாகுமென்டரி குறும்படத்திற்கு சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருது கிடைத்துள்ளது. சிறந்த ஒரிஜனல் பாடல் விருதை 'ஆர்ஆர்ஆர்' தெலுங்குப் படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் வென்றது.
விழா நடக்கும் போது மேடையில் அந்தந்த விருதுகளைப் பற்றிய அறிவிப்பு முன்னதாக வெளியிடப்படும். அப்படி சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான விருது பற்றிய அறிவிப்பை தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் வெளியிட்ட போது 'நாட்டு நாட்டு' பாடலைப் பற்றி பாலிவுட் படம் என்று குறிப்பிட்டார். அதை தெலுங்குப் படம் என்று குறிப்பிடாதது தெலுங்கு சினிமா ரசிகர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் படம் என்றால் அது ஹிந்திப் படங்களையே குறிக்கும். 'ஆர்ஆர்ஆர்' படம் பற்றிய அனைத்து பேட்டிகளிலும் அது தெலுங்குப் படம் என்றே மறக்காமல் குறிப்பிட்டு வந்தார் படத்தின் இயக்குனரான ராஜமவுலி. அப்படியிருக்கும் போது விழாக் குழுவினர் கவனக் குறைவாக படத்தை பாலிவுட் படம் எனக் குறிப்பிட்டதற்குப் பதிலளிக்க வேண்டும் என பல தெலுங்கு சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.