இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

இந்த வாரம் தமிழில் வரலட்சுமி நடிப்பில் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் கொன்றால் பாவம் என்கிற படம் வெளியாகி உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த இயக்குனரான தயாள் பத்மநாபன் கன்னடத்தில் பல படங்களை இயக்கி விட்டு முதன்முறையாக தமிழுக்கு வந்துள்ளார். இதே படத்தை கன்னடத்திலும் தெலுங்கிலும் இயக்கி வெற்றியை பெற்று விட்டு தற்போது தமிழில் கொன்றால் பாவம் என்கிற பெயரில் ரீமேக் செய்து இயக்கியுள்ளார். படத்தின் கதையம்சமும் கதையை நகர்த்திச் சென்ற விதமும் ஓரளவுக்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் மலையாளத்தில் பகலும் பாதிராவும் என்கிற படம் கடந்த மார்ச் 3ம் தேதி வெளியானது. குஞ்சாகோ போபன், ரஜிஷா விஜயன், குரு சோமசுந்தரம், ஜெய்பீம் புகழ் தமிழ், நடிகை சீதா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த இரண்டு படங்களின் கதையும் ஒன்றே. கவனித்து பார்க்கும்போதுதான் அந்த படத்தின் டைட்டில் கார்டிலும் கதை தயாள் பத்மநாபன் என குறிப்பிடப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
அதே சமயம் இந்த படத்தை மலையாளத்தில் மம்முட்டியை வைத்து கமர்சியல் படங்களை இயக்கிய அஜய் வாசுதேவ் இயக்கியுள்ளார். சொல்லப்போனால் கமர்சியல் அம்சங்களை சேர்க்கும் தமிழ் சினிமாவில் இந்த கதை அப்படியே எதார்த்தமாக எடுக்கப்பட்டிருக்க, அப்படியே உல்டாவாக மலையாளத்தில் அதிரடி போலீஸ், மிரட்டல் ரவுடி, சண்டை காட்சிகள் என மசாலா கலந்து எடுத்திருக்கிறார்கள்.
தமிழில் வரலட்சுமி காட்டிய அதே வில்லத்தனத்தை மலையாளத்தில் ரஜிஷா விஜயன் காட்டி நடித்துள்ளார். அதே சமயம் தமிழில் இந்த படத்திற்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. மலையாளத்தில் இந்த படத்தை ரசிகர்கள் படுமோசமாக விமர்சித்து வருகின்றனர். பொதுவாக மற்ற மொழிகளில் இருந்து மலையாளத்தில் ரீமேக் செய்யப்படும் படங்கள் தோல்வியையே தழுவி இருக்கின்றன. அந்த பட்டியலில் இந்த பகலும் பாதிராவும் படமும் இடம்பிடித்து உள்ளது.