500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
கன்னட திரை உலகில் முன்னணி ஹீரோவாக நடித்து வரும் கிச்சா சுதீப், சமீப காலமாக ஒரு பான் இந்திய நடிகராகவே மாறிவிட்டார். இந்த நிலையில் நீண்ட நாட்கள் கழித்து இயக்குனர் சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள கப்ஜா என்கிற படத்தில் வில்லனாக நடித்துள்ளார் சுதீப். கன்னட சினிமாவின் அதிரடி ஹீரோவான உபேந்திரா கதாநாயகனாக நடிக்க, ஸ்ரேயா கதாநாயகியாக நடித்துள்ளார். இதற்கு முன்னதாக ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஈகா மற்றும் சல்மான் கான் நடித்த தபாங் ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்த சுதீப் கிட்டத்தட்ட 10 வருட இடைவெளிக்கு பிறகு மூன்றாவது முறையாக வில்லனாக நடித்துள்ளார்.
வரும் மார்ச்-17ல் இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சுதீப் பேசியபோது, “பத்து வருடங்களுக்கு முன் எனக்கு வில்லனாக நடிக்க அழைப்பு வந்தபோது வில்லன், ஹீரோ என பிரித்து பார்க்கவில்லை. அந்த சமயத்தில் சல்மான் கானிடமும் அடி வாங்கினேன்.. ஈகா படத்தில் ஒரு ஈயிடமும் அடி வாங்கினேன். ஆனால் ரசிகர்கள் இரண்டு விதமான வில்லன் கதாபாத்திரங்களையும் ரசித்ததாக கூறினார்கள். இன்றைய சூழலில் ஹீரோவோ அல்லது வில்லனோ எதுவாக இருந்தாலும் எல்லோரும் கூட்டணி சேரும் தருணம் இது” என்று கூறியுள்ளார்.