நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் ராம் சரணின் 15வது படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். பான் இந்திய படமாக உருவாகி வரும் இப்படம் சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. அரசியல் கலந்த ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாக வெளியாக உள்ளது. அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தெலுங்கு சினிமா முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். இப்படத்தின் அடுத்த அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாதம் 20ம் தேதி தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் ராம்சரண், கியாரா அத்வானி வைத்து ஒரு பாடலை பிரமாண்டமாக படமாக்க ஷங்கர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்காக கலை இயக்குநர் அவினாஷ் கொல்லா இயக்கத்தில் ஐதராபாத்தில் பிரமாண்ட செட் தயாராகி வருகிறது. இப்பாடல் சுமார் பத்து கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் பட பாணியில் இந்த பாடல் கலக்கலாக இருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன் பாடலின் படப்பிடிப்பு சுமார் பத்து நாட்கள் நடைபெற உள்ளதாம்.
படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை வரும் மார்ச் 27ம் தேதி ராம்சரண் பிறந்தநாளில் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.