நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மெரினா புரட்சி, வலியோர் சிலர் உள்ளிட்ட படங்களில் நடித்த நவீன் தற்போது இயக்கி, நடித்திருக்கும் புதிய படம் ‛நியதி'. இப்படத்தில் கோவிந்த மூர்த்தி, தேனி முருகன், திலீப், அஞ்சனா பாபு, கோபிகா சுரேஷ், அக்ஷயா, விஜய ரண தீரன், அருண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜீனியஸ் பிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. ஜாக் வாரியர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பிரபு கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் நவீன் கூறியதாவது : கதை நாயகன் ஒரு தனியார் துப்பறியும் அலுவலகத்தில் துப்பறிவாளனாக பணிபுரிகிறார். மற்ற மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் பணியில் இருக்க, எதிர்பாராத விபத்தின் மூலமாக தானே ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார். அந்த பிரச்னையின் தீர்வை தேட முயல, அது கடந்த காலத்தில் நடந்த இன்னொரு பிரச்னை நீட்சியாக வருவதையும் கண்டறிகிறார். இரண்டு சம்பவங்ளுக்கும் தீர்வை தேடுவதே கதை. என்றார்.