நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

'சுந்தரி' சீரியல் மூலம் பிரபலமானவர் கேப்ரில்லா. இதேபோல் 'பாரதி கண்ணம்மா' சீரியல் மூலம் பிரபலமானவர் வினுஷா. இருவருமே சமூக வலைத்தளத்தின் மூலம் புகழ்பெற்று சின்னத்திரைக்கு வந்தவர்கள். உலகம் கேலி செய்த தங்கள் நிறத்தையே மூலதனமாக்கி ஜெயித்தவர்கள். இதில் கேப்ரில்லா நயன்தாரா நடித்த 'ஐரா' படத்தில் இளம் வயது நயன்தாராவாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். மேலும் சில படங்களில் நடித்துள்ளார். வினுஷாவும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இருவருமே என் 4 என்ற படத்தில் நாயகிகளாக நடித்துள்ளனர்.
இவர்களுடன் அனுபமா குமார், அக்ஷய் கமல், மைக்கேல் தங்கராஜ், அப்சல் ஹமீது, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்துள்ளனர். லோகேஷ் குமார் இயக்கியுள்ளார். வரும் மார்ச் 17ம் தேதி படம் திரைக்கு வரவிருக்கிறது.
கேப்ரில்லா கூறும்போது “நான் மீனவ பெண்ணாகவும், வினுஷா மாற்றுத்திறனாளியாகவும் நடித்துள்ளோம். ஒரு சம்பவத்தில் 3 ஜோடிகள் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியை தொடர்புப்படுத்தி நகரும் கதையாக தயாராகி உள்ளது. ஒரு சிறிய தவறு எப்படி சிக்கலை உருவாக்குகிறது என்பது கருவாக இருக்கும்'' என்றார்.