ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே விஜய் நடித்த நண்பன், பீஸ்ட் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த இவர், தற்போது லியோ படத்தின் மூலம் மூன்றாவது முறையாகவும் விஜய் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில், லியோ படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு அதிநவீன கேமரா குறித்த ஒரு தகவலை சோசியல் மீடியாவில் அவர் வெளியிட்டு இருக்கிறார். அதில், லியோ படத்தில் வி ராப்டார் எக்ஸ் எல் என்ற அதிநவீன கேமராவை முதன்முறையாக ஒரு தமிழ் படத்தில் பயன்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அதோடு இந்த கேமராக்களோடு இரண்டு ரேப்டர்கள் மற்றும் பேபி கமோடாவையும் பயன்படுத்தியிருக்கிறோம்.
மிஷ்கின், கவுதம் மேனன் போர்ஷன்கள் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தபடியாக விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன் நடிக்கும் போர்ஷன்கள் தொடங்கப்பட உள்ளது. இந்த போர்ஷனை முழுக்க முழுக்க இந்த மல்டி பார்மட் கேமராவை வைத்து தான் படமாக்கப் போகிறேன். லியோ படத்தின் காஷ்மீர் செட்டியூல் மார்ச் மாதம் இறுதிக்குள் முடிவடைந்து விடும். அதன் பிறகு சென்னை திருப்பி விட்டு ஒரு சிறிய பிரேக் எடுத்ததும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படம் திட்டமிட்டபடி அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வந்துவிடும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.