இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தற்போது சென்னை அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் என்ற இடத்தில் நடந்து வருகிறது. அங்குள்ள டச்சு கோட்டையில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். வெளிநாட்டு ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்று நடிக்கும் சண்டைக் காட்சிகள் அங்கு படமாகி வருகிறது.
நேற்று அங்கு படப்பிடிப்பு நடப்பதைக் கேள்விப்பட்டு ரசிகர்கள் அந்த இடத்தை சூழ்ந்தனர். படப்பிடிப்பு இடைவெளியில் கமல்ஹாசன் வெளியில் வந்து ரசிகர்களை சந்தித்தார். பலரும் எடுத்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.
'இந்தியன் 2' படப்பிடிப்பு அங்கு ஒரு வாரம் வரை நடைபெறும் எனத் தெரிகிறது. காஜல் அகர்வால் அப்படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது முடிவடையும், எப்போது படம் பற்றிய அடுத்த அதிகாரப்பூர்வ அப்டேட்டைக் கொடுப்பார்கள் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.