மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
எம்ஜிஆரின் உறவினரான ஜுனியர் எம்ஜிஆர் கதாநாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா தத்தா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள படம் 'இரும்பன்'. இப்படம் வரும் மார்ச் 10ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்காக வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்களில் படத்தின் இயக்குனரான கீரா பெயரை இருட்டடிப்பு செய்துள்ளதாக அவரும், அவரது நண்பர்களும் பேஸ்புக்கில் நிறைய பதிவிட்டு குற்றம் சாட்டியுள்ளார்கள். பொதுவாக போஸ்டர்களில் இயக்குனர் பெயர்கள் கொட்டை எழுத்தில்தான் இடம் பெறும். ஆனால், 'இரும்பன்' போஸ்டர்களில் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் போன்றே இயக்குனரின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
அந்தப் போஸ்டரைப் பகிர்ந்து இயக்குனர் கீரா, “இந்தப் படத்தின் இயக்குனர் யார், கண்டுபிடித்து சொல்லுங்கள்,” எனப் பதிவிட்டுள்ளார். மேலும், இப்படத்தின் சிறப்புக் காட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களை சந்தித்த போது இயக்குனரின் பெயரை மறக்காமல் குறிப்பிட்டுளளார். அந்த வீடியோவையும் பகிர்ந்து, “என் பெயர் போடாத, என்னை கூப்பிடாத, என் படத்தின் காட்சியில், திருமாவளவன் செய்தியாளரை சந்திக்கிறார். ஆகா, அற்புதம்…ஆனால், என்னை பற்றி நிறைய பேசுகிறார், நன்றி அண்ணா,” என்று குறிப்பிட்டுள்ளார்.
கீரா இதற்கு முன்பு, “எட்டுத் திக்கும் பற, மெர்லின், பச்சை என்கிற காத்து”, ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.