மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கலக்கி வந்த தேவயானி, சின்னத்திரையிலும் தடம் பதித்த தொடர் கோலங்கள். இயக்குநர் திருச்செல்வத்துக்கும் இந்த தொடர் மிகப்பெரிய புகழை பெற்று தந்தது. சொல்லப்போனால் தற்போது அவர் இயக்கத்தில் சக்கப்போடு போடும் 'எதிர்நீச்சல்' தொடருக்கே முன்னோடி 'கோலங்கள்' தான் என இப்போதும் அந்த சீரியலை ரசிகர்கள் பெருமையாக பேசி வருகின்றனர். கோலங்கள் தொடரின் இரண்டாவது பாகம் குறித்து முன்னதாக பலமுறை செய்திகள் வெளியானது. ஆனால், இன்று வரை அப்டேட் எதுவும் சரிவர தெரியவில்லை.
இந்நிலையில், திருச்செல்வம் அண்மையில் அளித்த பேட்டியின்போது கோலங்கள்-2 வருமா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த திருச்செல்வம் 'கண்டிப்பாக கோலங்கள்-2 வரும். தயாரிப்பு நிறுவனம் வேறு என்பதால் தாமதமாகிறது. கோலங்கள்-2 கண்டிப்பாக இதற்கு முன்பு ஒளிபரப்பான சேனலில் தான் வரும்' என்று கூறியுள்ளார். அவரது பதில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.