புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு |
பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக கருத்தை மையமாக வைத்து கடந்த 2019ல் துவங்கப்பட்ட படம் கன்னித்தீவு. சுந்தர் பாலு என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஆஸ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா மற்றும் சுபிக்ஷா என 4 கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன், லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் துவங்கப்பட்டு கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது இந்த படம் நேரடியாக தொலைக்காட்சியிலேயே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் உலகப் பெண்கள் தனமான மார்ச்-8ம் தேதி வெளியாக இருப்பது குறித்து படத்தின் இயக்குனர் சுந்தர் பாலு மற்றும் நாயகி வரலட்சுமி சரத்குமார் இருவரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். இது பற்றி வரலட்சுமி கூறும்போது, “பெண்களின் நட்பை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் அரிதாகவே படங்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் இந்த சுவாரசியமான படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் சந்தோஷம் அடைகிறேன். அதுமட்டுமல்ல நேரடியாக தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பாவது இன்னும் த்ரில்லிங்காக இருக்கிறது. பெண்கள் தினத்தில் வெளியாகும் இந்த படம் நேரடியாகவே ரசிகர்களை சென்றடையும் என்பதிலும் எனக்கு சந்தோசம் தான்” என்று கூறியுள்ளார்.
அதேசமயம் வரலட்சுமி தமிழ, தெலுங்கு என இருமொழிகளில் நடித்துள்ள கொன்றால் பாவம் திரைப்படம் வரும் மார்ச்-10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.