500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், கவுதம் மேனன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'பத்து தல' மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இது கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த 'முப்தி' என்ற படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்.
இதன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் கிருஷ்ணா பேசியதாவது : இந்தப் படம் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கும் மேல் தயாரிப்பில் இருந்தது. அத்தனை காலங்களிலும் அது குறித்து பேசி உயிர்ப்புடன் வைத்திருந்த அனைவருக்கும் நன்றி. படம் நன்றாகவே வந்திருக்கிறது. படம் வெளியானாலும் அது எப்படியான வெற்றியாக அமையும் என்ற கம்பேரிசன் பயமாக உள்ளது.
இது ரீமேக் கிடையாது. தழுவல்தான். 90 சதவிகிதம் வேறாக கொடுத்திருக்கிறேன். படத்தில் நிறைய சர்ப்ரைஸ் எலிமெண்ட்ஸ் இருக்கும். ஏ.ஆர். ரஹ்மான் சார் சிறந்த இசையை கொடுத்துள்ளார். படம் என்றாலே வசனம் தான் முக்கியாமனது. அது சிறப்பாக வந்துள்ளது.
நான் எது கேட்டும் ரஹ்மான் நோ சொன்னதே கிடையாது. கடைசி நேரத்தில் அவர் 'நம்ம சத்தம்' லிரிக்கல் வீடியோவில் சிறப்புத் தோற்றத்தில் ஷூட் செய்து அனுப்பினார். அவரது அன்பும் ஆதரவும் எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம். படத்தின் மிகப்பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா மார்ச் 18 அன்று நேரு விளையாட்டு உள்ளரங்கத்தில் நடைபெறுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களை மேடையில் பாட உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.