நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் கமல்ஹாசனுக்குச் சொந்தமாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற படத்தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது. கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக அந்நிறுவனம் படங்களைத் தயாரித்து வருகிறது. கமல்ஹாசன் நடிக்கும் படங்களை மட்டுமே அதிகமாகத் தயாரித்து வந்த அந்நிறுவனம் அவ்வப்போது மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களையும் தயாரித்துள்ளது.
சத்யராஜ் நடித்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', ரேவதி, ஊர்வசி, ரோகிணி நடித்த 'மகளிர் மட்டும்', மாதவன் நடித்த 'நளதமயந்தி', விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' ஆகிய மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரித்துள்ளது. 40 வருடங்களில் 4 படங்கள்தான் மற்ற நடிகர்களின் படங்கள்.
ஆனால், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சிவகார்த்திகேயன் நடிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி உள்ளது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. அடுத்து சிம்பு நடிக்கும் படத்தைத் தயாரிக்கப் போவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இவை தவிர இன்னும் சில இளம் நடிகர்களிடமும் பேசி வருகிறார்களாம். அவை பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.